18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி துணியால் கண்களை கட்டிக்கொண்டு வாலிபர் நூதன பிரசாரம்
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி துணியால் கண்களை கட்டிக் கொண்டு வாலிபர் நூதன பிரசாரம் மேற்கொண்டான்.
தென்காசி,
புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் உதயகுமார் (வயது 16). இவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான். இவன் நேற்று தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு நின்று துணியால் தனது கண்களை கட்டிக்கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று கூறி நூதன பிரசாரம் செய்தார்.
அப்போது அவன் தன்னை சுற்றி இருந்த பொதுமக்களிடம் ஏதாவது ஒரு பொருளை கொடுங்கள் நான் அதனை சரியாக கூறுகிறேன் என்றான். உடனே ஒருவர் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதனை வாங்கிய உதயகுமார் அந்த கார்டின் எண், எந்த வங்கியின் கார்டு என்பதை சரியாக கூறினான். மற்றொருவர் ரூ.200 கொடுத்தார். அதனை வாங்கிய உதயகுமார் அது ரூ.200 என்றும், அதில் உள்ள எண்களையும் சரியாக கூறினான்.
பின்னர் அங்கு தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக தென்காசி போலீசார் சார்பில், அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பின் முன்பு உதயகுமார் நடந்து சென்றார். அப்போது அவர் அந்த பகுதியில் சென்ற வாகனங்களின் பெயர்கள், வண்ணங்களை சரியாக கூறினான். ஊர்வலமானது காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு அம்மன் சன்னதி பஜார், கொடிமரம், மவுண்ட் ரோடு, காட்டுபாவா பள்ளி, கூலக்கடை பஜார் வழியாக சென்று போலீஸ் நிலையத்தை சென்றடைந்தது.
இதில் ஏராளமான போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு கைகளில் துப்பாக்கி ஏந்தி அணிவகுத்து சென்றனர்.
Related Tags :
Next Story