அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு


அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 4:00 AM IST (Updated: 16 April 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. சார்பில் அரியலூர் தொகுதி செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கீழப்பழுவூர்,

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. சார்பில் அரியலூர் தொகுதி செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல் மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெருமத்தூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் கனியமுதன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் சேகுவரா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story