தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம்


தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 4:00 AM IST (Updated: 16 April 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தூத்துக்குடி நகர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் காலை 7 மணிக்கு தனது பிரசாரத்தை தூத்துக்குடி நகர் பகுதியில் உள்ள பீட்டர் கோவில் தெருவில் தொடங்கினார்.

அங்கிருந்து பெரியகோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, தொம்மையார் கோவில் தெரு, காந்திநகர் 2-வது தெரு, லயன்ஸ் டவுன், மினி சகாயபுரம், இனிகோ நகர் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

பின்னர் மாலை 4 மணிக்கு வாகைகுளம் பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் வர்த்தகரெட்டிப்பட்டி, கே.பி.தளவாய்புரம், செக்காரக்குடி, பொட்டலூரணி, தெய்வச்செயல்புரம், திருவேங்கடபுரம், வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, மேல பூவாணி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story