மாவட்ட செய்திகள்

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் + "||" + Two young men who were riding a motorbike near Arumana killed a dog in the dungeon

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
அருமனை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அருமனை,

அருமனை அருகே கடையாலுமூடு, காட்டாவிளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 34). ஆறுகாணியை சேர்ந்தவர் அபிமன்யூ என்கிற மணிகுட்டன் (22). கற்றுவா பகுதியை சேர்ந்தவர் தானேஷ் (24). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளர்கள்.


கடந்த சிலநாட்களாக குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தனர்.

நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் இருந்து மருதங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அருமனை அருகே குஞ்சாலுவிளையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 3 பேரும் சாலையில்  தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெகதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அபிமன்யூ, தானேஷ் சாலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிமன்யூ பரிதாபமாக இறந்தார்.

 தானேஷ் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மோட்டார் சைக்கிள் மோதியதில் நாயும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து செத்தது.

விபத்தில் 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
2. உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
3. பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்தபோது 2 பேர் பலியானார்கள்.
4. திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி
திருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.
5. தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி
தா.பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பருடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.