தூத்துக்குடி தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில போலீசார் உள்பட 4 ஆயிரம் பேர் குவிப்பு

தூத்துக்குடி தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில போலீசார் உள்பட 4 ஆயிரம் பேர் குவிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 7:04 PM GMT)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீசார் உள்பட 4 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீசார் உள்பட 4 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 500 பேர், முன்னாள் ராணுவத்தினர் 300 பேர், ஊர்க்காவல் படையினர் 200 பேர், ஓய்வுபெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 பேர் மற்றும் மராட்டிய மாநில சிறப்பு போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பணி ஒதுக்கீடு

இதில் முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், ஓய்வுபெற்ற போலீசார் 530 பேர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு செய்தனர்.

தேர்தல் அமைதியாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்து உள்ளார்.

Next Story