தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு
தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் பாரிவேந்தர் வாக்குசேகரித்தார்.
திருச்சி,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, மாணவர் கல்வி கடன் தள்ளுபடி, 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 5 பவுன் வரை உள்ள நகை கடனை அரசு பணத்தை செலுத்தி மீட்டுத்தரும் என்று கூறப்பட்டுள்ளது. ராகுல்காந்தி வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை உயர்த்துவதற்காக மாதம் ரூ.6,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை கொடுக்கும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு உங்களது கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். உங்களில் ஒருவனாக உங்களின் தேவைகளை பூர்த்திசெய்பவனாக நான் இருப்பேன்.
தனித்தனி அலுவலகம்
6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி அலுவலகம் அமைத்து உங்களது கோரிக்கைகளை பெற்று மாதத்தில் 2 நாள் அந்தந்த பகுதிக்கு வந்து உங்களது தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story