மாவட்ட செய்திகள்

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் தொல்.திருமாவளவன் பேச்சு + "||" + We will send Modi to the Tamil people who betrayed the Tamil people

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் தொல்.திருமாவளவன் பேச்சு

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் தொல்.திருமாவளவன் பேச்சு
தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி இந்துக்களுக்கு செய்த ஒரே நலத்திட்டம் பண மதிப்பிழப்புதான். இந்துக்களின் காவலன் என்று கூறும் மோடி ஜி.எஸ்.டி. மூலம் இந்துக்களை வஞ்சித்து விட்டார். மோடியும், ராமதாசும் இந்துக்களை ஏமாற்றியவர்கள்.


பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வுடன் பேரம் பேசி கூட்டணி வைத்துள்ளன. பா.ஜ.க., அ.தி.மு.க.வை மிரட்டி பணிய வைத்து கூட்டணியில் சேர்ந்துள்ளது. கஜா புயலின் போது மோடியும், அமித்ஷாவும், ராஜ்நாத்சிங்கும் தமிழகம் வந்தார்களா?. ஆனால் இன்று ஓட்டுக்காக வந்து உங்கள் முன் நிற்கிறார்கள். நீட் பிரச்சினையில் தொடங்கி, காவிரி நீர் பங்கீடு வரை தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் வேண்டாம் மோடி. இந்த தேர்தலுடன் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற ஒரே கொள்கையில் எந்த முரண்பாடும் இல்லாத ஒரே கூட்டணி தி.மு.க. கூட்டணி. எனவே பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அப்போது தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு
மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த செய்குதம்பி பாவலர் பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசினார்.
2. கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டம் தொடர்பாக சுற்றுலா பயணிகளின் கருத்து கேட்கப்படும் தளவாய்சுந்தரம் பேச்சு
கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டம் அமைப்பது தொடர்பாக சுற்றுலா பயணிகளின் கருத்தை அறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தளவாய்சுந்தரம் கூறினார்.
3. அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
4. விவசாயத்தை பாதிக்கின்ற திட்டங்களை அ.ம.மு.க. எதிர்க்கும் டி.டி.வி. தினகரன் பேச்சு
விவசாயத்தை பாதிக் கின்ற திட்டங்களை அ.ம.மு.க. எதிர்க்கும் என்று மயிலாடுதுறையில் நடந்த மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
5. இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேச்சு
இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.