ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி


ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 17 April 2019 3:15 AM IST (Updated: 17 April 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியானார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலம் கிராமம் சிங்காரபேட்டை தெருவை சேர்ந்தவர் குமாரி (வயது 45). இவரது கணவர் ஆறுமுகம் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் இவர் தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். கணவர் இறந்தபின் குமாரி, அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் சேவூர் பைபாஸ் ரோட்டை கடந்தார். அப்போது இரும்பேடு நோக்கி சென்ற வாகனம் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட குமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றிஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

விபத்துக்கு காரணமான வாகனத்தை அடையாளம் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story