திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் கழிமுக கால்வாயில் குதித்தார் தேடும் பணி தீவிரம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் கழிமுக கால்வாயில் குதித்தார் தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 10:09 PM GMT)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் பிவண்டி கழிமுக கால்வாயில் குதித்தார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தானே,

திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் பிவண்டி கழிமுக கால்வாயில் குதித்தார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாலத்தில் இருந்து குதித்தார்

தானே மாவட்டம் இந்திராநகரை சேர்ந்தவர் அமான் இர்பான் (வயது21). என்ஜினீயர். இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடத்த நிச்சயம் செய்து இருந்தனர்.

இந்தநிலையில், அமான் இர்பான் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். பிவண்டி காசோலி கழிமுக மேம்பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் திடீரென அவர் அந்த பாலத்தில் இருந்து கழிமுக கால்வாயில் குதித்து விட்டார்.

மீட்பு பணி தீவிரம்

இதனை அங்கு படகில் இருந்த மீனவர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அமான் இர்பானை மீட்க முயன்றனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி மாயமாகிவிட்டார்.

எனவே சம்பவம் குறித்து நார்போலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் கால்வாயில் மூழ்கிய அமான் இர்பானை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 6 மணி நேரம் ஆகியும் அவர் மீட்கப்படவில்லை. பல மீனவர்களின் படகுகள் உதவியுடன் அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story