ஆலப்புழா ‘போட் ஹவுஸ்’


ஆலப்புழா ‘போட் ஹவுஸ்’
x
தினத்தந்தி 17 April 2019 4:01 PM IST (Updated: 17 April 2019 4:01 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் என்றாலே பசுமையான தென்னை மரங்களும் அழகான ஓடைகளும் தான் நினைவுக்கு வரும்.

அலேபி என்றழைக்கப்படும் ஆலப்புழா புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கே வீடுகள் போன்று கட்டப்பட்ட படகுகளில் சவாரி செய்வது ஒரு அருமையான அனுபவம். ஒரு நாள் முழுவதும் இந்த படகு வீட்டில் தங்கலாம். இந்த படகு வீடுகள் பல அளவுகளில் இருக்கின்றன. நமது பட்ஜெட்டை பொறுத்து புக் செய்து கொள்ளலாம். சுத்தமான அறைகள், சமையலறை, பாத்ரூம்கள் என்று அச்சு அசலாக ஒரு வீட்டின் அமைப்பை ஒத்திருக்கிறது இதன் வடிவம். படகு ஓட்டுபவருடன் ஒரு சமையல்காரரும் நம்முடன் பயணிப்பார். நமது விருப்பத்திற்கேற்ப சூடான, சுவையான உணவை மூன்று வேளைக்கும் சமைத்து பரிமாறுவார். டீ, சிற்றுண்டி முதல் அனைத்தும் நம்மை தேடி வரும். சாப்பிடும் போதே, இயற்கையை ரசித்துக் கொண்டே மெதுவாக ஊர்ந்து செல்லும் படகில் அமர்ந்து சவாரி செய்யலாம். அந்திப் பொழுதில் படகுகள் மீனவர்களுக்கு வழி விட்டு நிறுத்தத்திற்கு வந்து விடும். அப்போது சிறிய படகுகளில் ஏறி அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சென்று வரலாம். கரையோர வீடுகளில் தங்கி இருக்கும் அந்த மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். இந்த சிறிய படகில் பயணிக்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.

இரவில் மீண்டும் நம் படகு வீட்டிற்குத் திரும்பி நிலவின் வெளிச்சத்தில் மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தால் அடடா! இதை விட வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் என்று தோன்றும். அவ்வளவு சுகமான அனுபவத்தை தரும் ஆலப்புழா படகு சவாரி.

Next Story