சூழலை பாதிக்காத பேட்டரி பஸ்
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேட்டரியில் ஓடும் பஸ்ஸை உருவாக்கியுள்ளது.
வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் ஸ்கைலைன் புரோ” என்ற பெயரில் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் உருவாக்கியுள்ள முதலாவது பேட்டரி பஸ் இதுவாகும்.
இதில் ரெவோலோ தொழில்நுட்பம் பின்பற்றப் பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார், கண்ட்ரோலர், பேட்டரி, அதை நிர்வகிக்கும் அமைப்பு ஆகிய அனைத்தும் ஒரு தொகுப்பாக இதில் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்ள பேட்டரி குறைந்த அளவிலான மின்சாரத்தை உறிஞ்சக் கூடியது. அதாவது ஒரு கிலோ மீட்டர் பயணத்துக்கு 0.8 யூனிட் மின்சாரமே செலவாகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்து சோதித்ததில் 177 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. சீனாவின் பி.ஒய்.டி. நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் பேட்டரி பஸ்களை தயாரிக்கும் நிறுவனமாக ஐஷர் மோட்டார்ஸ் உருவாகியுள்ளது. இந்த பஸ்ஸில் ஏர் கண்டிஷன் வசதியும் உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்தபோதிலும் ஏ.சி.யும் செயல்பட்டு அதிக தூரம் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 9 மீட்டர் நீளம் கொண்டது.
இதில் டாப்அப் சார்ஜரும் உள்ளது. இதனால் பேட்டரி தீர்ந்து போகும் சூழலில் குறைந்த வோல்டேஜிலும் பஸ் இயங்கும். இந்திய சாலைகளில் இயங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஷர் ஆலையில் இந்த பஸ்கள் தயாராகின்றன.
Related Tags :
Next Story