மாவட்ட செய்திகள்

வானவில் : சீன தயாரிப்புகளுக்கு போட்டியாக சாம்சங் ஸ்மார்ட் டி.வி. + "||" + Vanavil : Samsung smart TV competitors for Chinese products

வானவில் : சீன தயாரிப்புகளுக்கு போட்டியாக சாம்சங் ஸ்மார்ட் டி.வி.

வானவில்  : சீன தயாரிப்புகளுக்கு போட்டியாக சாம்சங் ஸ்மார்ட் டி.வி.
கொரியாவின் சாம்சங் நிறுவனம் இதுவரை பிரீமியம் டி.வி.க்களை மட்டுமே தயாரித்து வந்தது. ஆனால் சீன நிறுவனங்களோ குறைந்த விலையில் எல்.இ.டி. டி.வி.க்களை தயாரித்து இந்நிறுவன விற்பனை சந்தையை ஆக்கிரமித்து வந்தன.
இதற்குப் பதிலடியாக சாம்சங் நிறுவனமும் தற்போது குறைந்த விலையிலான அதிக நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.24,900 ஆகும். மேஜிக் ஸ்மார்ட் டி.வி. என்ற பெயரில் 33 அங்குலம் கொண்டவையாக இவை வந்துள்ளன. இந்த வரிசையில் 82 அங்குல அகலம் கொண்ட டி.வி.க்கள் வரை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த டி.வி.க்கள் அனைத்தும் சாம்சங் விற்பனையகம் மட்டுமின்றி அனைத்து முன்னணி எலெக்ட்ரானிக் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். இந்த டி.வி.யை பெர்சனல் கம்ப்யூட்டராகவும் பயன்படுத்தும் வகையில் ஹோம் கிளவுட், லைவ் கேஸ்ட், இரு வழி பகிர்வு (டூ வே ஷேர்) ஆகியன இதில் உள்ளன. இதில் ஹெச்.டி. (ஹை டைனமிக்) மற்றும் அல்ட்ரா பிக்ஸ் தொழில்நுட்பமும் உள்ளது. இது தவிர அல்ட்ரா ஹை டெபினிஷன் 4 கே ரெசல்யூஷன் இருப்பதால் இவற்றில் படங்கள் துல்லியமாக தெரியும்.

பர்சனல் கம்ப்யூட்டராக பயன்படுத்த முடியும் என்பதால் இதில் வாடிக்கையாளர்கள் டாகுமென்ட்கள் தயாரிப்பது மற்றும் பிரசன்டேஷனுக்குத் தேவையானவற்றை தொகுப்பது உள்ளிட்டவற்றை கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் மேற்கொள்ள முடியும். லேப் டாப் மூலம் பெரிய திரையில் தங்களது கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த டி.வி. ஸ்கிரீனை வயர்லெஸ் இணைப்பின்றி செயல்படுத்த முடியும். இதனால் இண்டர்நெட் மூலம் லேப்டாப் வழியாக டி.வி.யை செயல்படுத்தலாம். இதில் கூடுதல் சிறப்பம்சமாக பன்முக பாதுகாப்பு அம்சங்ரிள் (நாக்ஸ்) உள்ளன. அத்துடன் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 சேவையும் பெறலாம். இதில் உள்ள ஆடியோ சிஸ்டம் மிகச் சிறப்பான இசையை வெளிப்படுத்த உதவுகிறது.

சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்கள் விர்ச்சுவல் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி இருப்பதால் படங்கள், வீடியோ காட்சிகளை பதிவு செய்யலாம். இதில் உள்ள யு.எஸ்.பி. டிரைவ் ஆனது பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நபர்களைத் தவிர மற்றவர்களால் இதை செயல்படுத்த முடியாது. இந்த டி.வி.யுடன் குறிப்பிட்ட எண் கொண்ட ஸ்மார்ட் போனை சிங்க் செய்துவிட்டால் பிறகு தானாகவே அந்த ஸ்மார்ட்போன் அருகில் இருக்கும்போது இதன் யு.எஸ்.பி. டிரைவ் செயல்படும்.

இதில் லைவ்கேஸ்ட் வசதி இருப்பதால் தொலை தூரத்தில் இருந்து கூட ஸ்மார்ட்போன் மூலம் டி.வி.யில் நிகழும் காட்சிகளை பதிவு செய்ய உத்தரவிட முடியும். அதையே தங்களுக்குப் பிடித்த மற்றவர்களுக்கு இணைத்து அதை காணும்படி செய்யலாம். இதில் டூ வே ஷேரிங் வசதி இருப்பதால் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்க்கும் அதே சமயம், வேறிடத்தில் ஸ்மார்ட்போனிலும் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம். இதில் ஸ்மார்ட் ஹப் வசதி இருப்பதால் பல்சுவை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.