டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது


டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 5:04 PM GMT)

டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதையொட்டி. அவர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.

Next Story