மாவட்ட செய்திகள்

ஒரகடம் அருகேஎரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை + "||" + Near orakatam Dead in private company employee dead Murder? Police investigation

ஒரகடம் அருகேஎரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

ஒரகடம் அருகேஎரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை
ஒரகடம் அருகே எரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படப்பை, 

சென்னை ஆண்டார்குப்பம் பெருமாள் கோவில் தெரு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 49). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 மாதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து சில அடி தூரத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் எரித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் விஜயுடன் தங்கி வேலை செய்து வந்த சென்னையை சேர்ந்த தேவன் (50), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜின் மேஷாக் ( 19), ரெஜு (30), சென்னை ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (34) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் கொடை விழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நெல்லை அருகே கோவில் கொடை விழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவத்தில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. ஏரியூர் அருகே விவசாயி மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
ஏரியூர் அருகே விவசாயி மர்மமான முறையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.20 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் அருகே நகைக்கடை அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. தஞ்சையில் கார் மோதி விபத்து; 2 பேர் பலி
தஞ்சையில் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.