பெங்களூருவில் இடி-மின்னலுடன் திடீர் மழை மரம் முறிந்து விழுந்து கூரியர் நிறுவன ஊழியர் பலி
பெங்களூருவில் இடி-மின்னலுடன் திடீரென நேற்று மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில் கூரியர் நிறுவன ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் இடி-மின்னலுடன் திடீரென நேற்று மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில் கூரியர் நிறுவன ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார்.
அனல் காற்று வீசியது
கோடை காலத்தையொட்டி பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. இதனால் ெபாதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். மழை வராதா? என்ற ஏக்கம் மக்களிடையே தென்பட்டது.
வழக்கம்போல் நேற்றும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் ஒன்று கூடியது. அதைத்தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழை சுமார் 15 நிமிடங்கள் பெய்தது.
கனமழை பெய்தது
மெஜஸ்டிக், ராஜாஜிநகர், வில்சன் கார்டன், விதான சவுதா, ஜெயநகர், ஆர்.டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
லும்பினிகார்டன் பகுதியில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிரண் (வயது 27) என்பவா் மரணம் அடைந்தார். அவர் துமகூரு மாவட்டம் குனிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் பெங்களூருவில் ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மகிழ்ச்சி
மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேக்ரி சர்க்கிளில் உள்ள சுரங்க பாதையில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சுரங்க பாதையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்த மழையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக நகரில் வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மழை பெய்ய வாய்ப்பு
இதற்கிடையே அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து பெங்களூருவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story