தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு


தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 7:13 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 5 தொகுதிகள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியும் இடம் பெற்றுள்ளன.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 19 லட்சத்து 35 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 2 ஆயிரத்து 290 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தஞ்சை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தஞ்சை சட்டசபை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 852 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்களும், 55 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர்.

திருவையாறு சட்டசபை தொகுதியில் 307 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 4 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர். ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் 271 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 244 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 635 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 5 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 271 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 419 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களும், 21 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர். பேராவூரணி சட்டசபை தொகுதியில் 260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 929 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 6 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 79 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 14 பேரும் வாக்களிக்க உள்ளனர். கும்பகோணம் சட்டசபை தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 554 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 3 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் சட்டசபை தொகுதியில் 300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 539 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 505 பெண் வாக்காளர்களும், 10 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 11 ஆயிரத்து 995 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வு தளம், சக்கரநாற்காலி போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகளும் வரையப்பட்டுள்ளன.


Next Story