காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் அறையில் மேலும் 4 செல்போன்கள் பறிமுதல்
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் அறையில் மேலும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலாப்பட்டு,
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள சில ரவுடிகள் செல்போன் மூலம் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகளிடம் பேசி, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் கைதிகள் அறையில் சோதனை நடத்தியபோது, கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி கார்த்தி என்பவர் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சிறை அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிறை சூப்பிரண்டு கோபிநாத் உத்தரவின் பேரில் அனைத்து கைதிகளின் அறைகளையும் சிறை அதிகாரிகள், வார்டர்கள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது 4 செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த, சிறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story