சிவகங்கை மாவட்டத்தில் 46 இடங்களில் ரூ.82 லட்சம் பறிமுதல்


சிவகங்கை மாவட்டத்தில் 46 இடங்களில் ரூ.82 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 8:24 PM GMT)

மாவட்டத்தில் 46 இடங்களில் ரூ.82 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை,

இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நேற்று வரை மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை மற்றும் தணிக்கைக் குழு ஆகிய குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டன. அதன்மூலம் மாவட்டத்தில் ரூ.82 லட்சம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, இதுவரை 88 புகார்கள் தொலைபேசி மூலமாகவும், 11 புகார்கள் தேர்தல் கமிஷன் செயலி மூலமும், கட்டணமில்லா தொலைபேசியில் 7 புகார்களும் வரப்பெற்று 13 இடங்களில் வருமான வரித்துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பிரசாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் பணி தொடர்பாக பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்காக சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதை தவிர்த்திட வேண்டும். அதேபோல் வாக்குப்பதிவு முடியும் வரை திருமண மண்டபம் மற்றும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான பயன்பாட்டிற்கு வழங்கக்கூடாது என்றும் மாவட்டநிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story