மாவட்ட செய்திகள்

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு + "||" + Drunk poison near Momepet Doctor suicide is a disastrous decision in family dispute

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (31). இவர்களுக்கு ஹேசிகா (11), ஹன்சிகா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.


இந்த நிலையில் வெங்கடேசனுக்கும், அவருடைய மனைவி கிருத்திகாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசன் விஷம் குடித்துவிட்டார். இதில் சிறிதுநேரத்தில் அவர் இறந்தார்.

இதுபற்றி தெரியவரவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
நாகர்கோவிலில் கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
2. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மணப்பாறை அருகே உயர் மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மணப்பாறை அருகே, உயர் மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
5. கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி போலீசார் மடக்கி பிடித்தனர்
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.