காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் நடந்தது ராகுல் காந்தி, சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும் உத்தவ் தாக்கரே பேச்சு
காங்கிரஸ் தலைமையில் நடந்த 10 ஆண்டு ஆட்சியில் தான் ஊழல் நடந்தது. இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,
காங்கிரஸ் தலைமையில் நடந்த 10 ஆண்டு ஆட்சியில் தான் ஊழல் நடந்தது. இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே பேசினார்.
வெட்கப்பட வேண்டும்
மும்பையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளை வசைபாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையில் நடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வெறும் ஊழல்தான் நடந்தது. அந்த அரசில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அங்கம் வகித்தார். அப்போது நடந்த ஊழல்களை ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் என எண்ணிக்கொண்டே போகலாம். இவ்வாறு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல் செய்தவர்கள் தற்போது ஊழல் பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான அரசில் நடந்த ஊழல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி மற்றும் சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும்.
வறுமை ஒழிப்பு
சோனியா காந்தி வெளிநாட்டுபெண் என்பதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சரத்பவார் காங்கிரசில் இருந்து வெளியேறிவர். ராகுல் காந்தியின் பாட்டியான, இந்திரா காந்தியால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. அவரால் முடியாததை ராகுல் காந்தி எவ்வாறு செய்வார்?.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மறைந்த கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு எதிராக சரத்பவார் வெளியிட்ட கருத்தை சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே, இறந்த ஒருவரின் பெயரை வம்புக்கு இழுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story