செய்யாறு அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்


செய்யாறு அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 18 April 2019 10:15 PM GMT (Updated: 18 April 2019 5:20 PM GMT)

செய்யாறு அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால் கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

செய்யாறு, 

வெம்பாக்கம் தாலுகா அரசானபாளையம் கிராம பஞ்சாயத்துக்கு உட் பட்ட சித்தாலப்பாக்கம் கிரா மத்தில் சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் வசதி கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் கோரிக்கைகள் நிறை வேற்றப் படாததால் நாடாளு மன்ற தேர்தலில் வாக்களிக் காமல் கிராம மக்கள் புறக் கணித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெம்பாக்கம் தாசில்தார் சுப் பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் வைக்கும் கோரிக் கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனாலும் கிராம மக்கள் அதிகாரியின் உறுதிமொழியை ஏற்க மறுத்து வாக்களிப்பதை புறக்கணித் தனர். மேலும் பூத் ஏஜெண்டு களும் வரவில்லை.

மாலை 5 மணி நிலவரப்படி சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மொத்த வாக்காளர்கள் 405 பேரில் 24 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு காஞ்சீபுரம் மாகரல் சாலைக்கோ அல்லது காஞ்சீபுரம் - வந்தவாசி சாலைக்கோ செல்ல வேண்டும். ஆனால் இந்த 2 முக்கிய சாலைகளுக்கு கிராமத்தில் இருந்து செல்லும் 2 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடி க்கையும் மேற்கொள்ள வில்லை. சேதமடைந்த சாலையால் எந்த ஒரு சரக்கு வாகனமோ, அல்லது 108 ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்குள் வராததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க கூட வேட்பாளர் எங்கள் கிராமத்திற்கு வரவில்லை என்றால் இந்த சாலை எவ்வளவு மோசமாக உள்ளது என்று பாருங்கள். மேலும் குடிநீர் பிரச்சினையும் உள்ளது அதையும் தீர்க்க ஊராட்சி நிர்வாகம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களுடைய பிரதான பிரச்சினையான சாலை வசதியை மேம்படுத்தி கொடுத் தால்தான் நாங்கள் வாக் களிப்போம் என்று உறுதி யோடு இருந்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்குச்சாவடிக்குள் யாரும் வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப் பட்டது.

Next Story