உஸ்மனாபாத் நாடாளுமன்ற தொகுதியில் 2 கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்


உஸ்மனாபாத் நாடாளுமன்ற தொகுதியில் 2 கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 11:30 PM GMT (Updated: 18 April 2019 9:55 PM GMT)

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் உஸ்மனாபாத் தொகுதியில் 2 கிராமத்தை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

மும்பை, 

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் உஸ்மனாபாத் தொகுதியில் 2 கிராமத்தை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

2-ம் கட்ட தேர்தல்

மராட்டியத்தில் உள்ள உஸ்மனாபாத் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உஸ்மனாபாத்தில் உள்ள பூம் தாலுகா ஜேஜலா கிராமம் மற்றும் துல்ஜாபூர் தாலுகா தனேகாவ் கிராமத்தை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இரண்டு கிராமங்களிலும் மதியம் 1 மணி வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சாகர் போசாலே என்பவர் கூறியதாவது:-

உயிரிழப்பு

எங்கள் கிராமத்தில் நல்ல சாலை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் யாரும் நிறைவேற்ற முன்வரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தை சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம்.

வெறும் 2½ கிலோமீட்டர் உள்ள ஆஸ்பத்திரியை சென்றடைய மோசமான சாலையால் 45 நிமிடங்கள் ஆனது. நேரத்துக்கு கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அவர் உயிரிழக்க நேரிட்டது. எனவே கிராமத்தை சேர்ந்த அனைவரும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் துல்ஜாபூர் தாலுகா தனேகாவ் கிராம மக்கள் கூறுகையில், “ நாங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை நில ஆவணம் எங்கள் பெயருக்கு மாற்றித்தரப்படவில்லை. எனவே நாங்கள் யாருக்கும் ஓட்டுப்போடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Next Story