ஆவணங்கள் இல்லாததால் குழப்பம் த.வெள்ளையன் மனைவி விரலில் ‘மை’ வைக்க மறந்த தேர்தல் பணியாளர்


ஆவணங்கள் இல்லாததால் குழப்பம் த.வெள்ளையன் மனைவி விரலில் ‘மை’ வைக்க மறந்த தேர்தல் பணியாளர்
x
தினத்தந்தி 18 April 2019 11:34 PM GMT (Updated: 18 April 2019 11:34 PM GMT)

வாக்குச்சாவடியில் நேற்று காலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனின் மனைவி வாக்களிக்க வந்தார்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர்கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனின் மனைவி வாக்களிக்க வந்தார். அவரிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் அவரை வாக்களிக்க தேர்தல் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வாக்குச்சாவடிக்கு வந்த த.வெள்ளையன், அங்கிருந்த தேர்தல் பணியாளர்களிடம் விவரம் கேட்டு, உரிய விளக்கம் அளித்தார். இதையடுத்து அவருடைய மனைவியை வாக்களிக்க அனுமதித்தனர்.

இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் மற்றும் பணியாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டதால் வெள்ளையனின் மனைவியின் விரலில் ‘மை’ வைக்க மறந்து விட்டனர். அவர் வாக்களித்த பின்னரே, விரலில் ‘மை’ வைக்கவில்லை என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரது கை விரலில் தேர்தல் பணியாளர் ‘மை’ வைத்தார். பின்னர் வெள்ளையன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story