சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி
சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி ஜனநாயக கடமையை ஆற்றி புதிய வாழ்க்கையை தொடங்கினர்.
சென்னை,
சென்னையை அடுத்த கொரட்டூர் வெங்கட்ராமன் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 33). மோட்டார் சைக்கிள் விற்பனை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை 9 மணியளவில் பாடி சிவன் கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதி இருவரும் “நாங்களும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்று தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் மனப்பூர்வமாக அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
மணமகன் மோகனுக்கு கொரட்டூரில் உள்ள வாக்குச்சாவடியிலும், மணமகள் சண்முகப்பிரியாவுக்கு ஏழுகிணற்றில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டு இருந்தது. இதனால், மணமக்கள் மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக காரில் வாக்களிக்க புறப்பட்டனர். முதலில், கொரட்டூரில் உள்ள பள்ளியில் மோகன் வாக்களித்தார். அவரது மனைவி வெளியே காத்திருந்தார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஏழுகிணறு பகுதிக்கு இருவரும் சென்றனர். அங்குள்ள வாக்குச்சாவடியில் சண்முகப்பிரியா வாக்களித்தார். ஓட்டுப்போட்ட மகிழ்ச்சியில் இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
இதே போல சென்னை மாதவரம் மண்டலம் வார்டு 24-ல் உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருக்கும், தீபா என்பவருக்கும் நேற்று காலை சூரப்பட்டு அருகே உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகன் ராமு, தனது மனைவி தீபாவுடன் மணக்கோலத்தில் வந்து சூரப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

Related Tags :
Next Story