லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: கணவன், மனைவி பலி


லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: கணவன், மனைவி பலி
x
தினத்தந்தி 20 April 2019 3:30 AM IST (Updated: 19 April 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய நாமக்கல்லை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

சேலம் மாமாங்கத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 31). கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரேமா (21).

கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேலத்தை நோக்கி சென்றனர். சேலம் அருகே உள்ள வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே வந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரசன்னா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசன்னா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிய பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாமக்கல் ஆர்.பி.புதூரை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன் (56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story