பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டத்துக்கு 4-வது இடம் - 95.01 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டத்துக்கு 4-வது இடம் கிடைத்தது. 95.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் கூறியதாவது:-
கோவை,
கோவை மாவட்டத்தில் 81 அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகள் என மொத்தம் 348 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 352 மாணவர்களும், 19 ஆயிரத்து 648 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அதில் 14 ஆயிரத்து 383 மாணவர்களும், 18 ஆயிரத்து 870 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 253 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 95.01 சதவீதம் ஆகும். இதில் மாணவர்களின் தேர்ச்சி 93.69 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி 96.04 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சிவிகிதம் அதிகமாக உள்ளது.
இதுவே கடந்த 2017-ம் ஆண்டு 95.83 சதவீதம் எடுத்து மாநில அளவில் 10-வது இடமும், 2018-ம் ஆண்டு 95.48 சதவீதம் எடுத்து 8-வது இடமும் பிடித்து இருந்தது.
இந்த ஆண்டு 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 0.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது. வரும் ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story