திருமங்கலத்தில் பரிதாபம், மகன்களை மிரட்ட விஷம் குடித்த பெற்றோர் - தாய் பலி, தந்தைக்கு தீவிர சிகிச்சை


திருமங்கலத்தில் பரிதாபம், மகன்களை மிரட்ட விஷம் குடித்த பெற்றோர் - தாய் பலி, தந்தைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 20 April 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் மகன்களை மிரட்டுவதற்காக விஷம்குடித்த தாய் பரிதாபமாக இறந்தார். தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர்புரம் வடபகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 48). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மற்றொருவர் டிப்ளேமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பெற்றோர் பேச்சை கேட்காமல் பொறுப்பின்றி இருந்ததாக தெரிகிறது. பலமுறை அவர்களை கண்டித்தும் அவர்கள் 2 பேரும் திருந்தவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த பெற்றோர், மகன்களை சாதாரணமாக அறிவுரை கூறினால் திருந்த மாட்டார்கள். அவர்களை மிரட்டி நல்வழிப்படுத்தலாம் என முடிவு செய்தனர். சாந்தியும், திருப்பதியும் தாங்கள் தற்கொலை செய்வதாக கூறினால் மகன்கள் திருந்தி விடுவார்கள் என கருதினர். இதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று காலை விஷம் குடித்தனர். பின்னர் தனது மகன்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் பொறுப்பின்றி இருப்பதால் நாங்கள் விஷம்குடித்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டதும் மகன்கள் 2 பேரும் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு விஷம்குடித்து மயங்கி கிடந்த தாய், தந்தையை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்குசாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் திருப்பதிக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story