நாடாளுமன்ற தேர்தல் 4 போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் மராட்டிய பா.ஜனதா நடவடிக்கை


நாடாளுமன்ற தேர்தல் 4 போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் மராட்டிய பா.ஜனதா நடவடிக்கை
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 20 April 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்கி உள்ள 4 போட்டி வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜனதா நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்கி உள்ள 4 போட்டி வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜனதா நடவடிக்கை எடுத்துள்ளது.

போட்டி வேட்பாளர்கள்

மராட்டியத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அனில்கோடே சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததுடன், துலே நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மத்திய இணை மந்திரியும், எம்.பி.யுமான சுபாஸ் பாம்ரே போட்டியிடுகிறார்.

இதேபோல் நந்துர்பர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஹீனா காவித் எம்.பி.யை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த நாடாவாடேகர் போட்டியிடுகிறார்.

நாசிக் தொகுதியில் கூட்டணி கட்சியான சிவசேனா சார்பில் களம் இறங்கும் எம்.பி. ஹெமந்தி கோட்சேவுக்கு எதிராக பா.ஜனதா கட்சியின் மாணிக்ராவ் காகடே களம் இறங்கி உள்ளார்.

பா.ஜனதா முன்னாள் எம்.பி. வாக்சவுரே தற்போது அந்த தொகுதியில் கூட்டணி கட்சியான சிவசேனா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

நீக்கம்

கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து களம் கண்டுள்ள மேற்கண்ட போட்டி வேட்பாளர்கள் 4 பேரையும் பா.ஜனதா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

போட்டி வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகள் ஆதரிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story