தொடர்பை துண்டித்த ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மும்பை கோர்ட்டு தீர்ப்பு
தொடர்பை துண்டித்த ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
தொடர்பை துண்டித்த ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கள்ளத்தொடர்பு
மும்பை கோவண்டியை சேர்ந்தவர் யாசின் சேக்(வயது30). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் நூர்பானு அலி (25) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்தது.
இந்தநிலையில் யாசின் சேக்கின் நடவடிக்கை பிடிக்காததால் நூர்பானு அலி அவரின் தொடர்பை துண்டித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி கோவண்டியில் உள்ள பூங்காவில் வைத்து நூர்பானு அலியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, யாசின் சேக்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் யாசின் சேக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story