பூங்காவில் விளையாடிய 2 சிறுமிகளை கடத்திய வாலிபர் கைது 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்


பூங்காவில் விளையாடிய 2 சிறுமிகளை கடத்திய வாலிபர் கைது 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 20 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

பூங்காவில் விளையாடிய 2 சிறுமிகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்ததுடன், 12 மணி நேரத்தில் சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மும்பை, 

பூங்காவில் விளையாடிய 2 சிறுமிகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்ததுடன், 12 மணி நேரத்தில் சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமிகள் கடத்தல்

மும்பை அக்ரிபாடா பேபி கார்டன் அருகே நடைபாதையில் வசித்து வந்த 5 மற்றும் 7 வயது சிறுமிகள் நேற்று முன்தினம் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாட சென்றனர். வெகுநேரம் ஆகியும் 2 சிறுமிகளும் வீட்டிற்கு திரும்பாததால், அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் கிடைக்காமல் போனதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகார்களின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில், சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த வாலிபர் 2 சிறுமிகளையும் கடத்தி சென்றது தெரியவந்தது.

வாலிபர் கைது

மேலும் அவர் மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் வழியாக சர்னிரோடு அருகே சிறுமிகளை அழைத்து சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கைதான வாலிபரின் பெயர் கவுரவ் மகாதிக் (வயது19) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ன காரணத்திற்காக சிறுமிகளை கடத்திச்சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து 12 மணி நேரத்தில் சிறுமிகளை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story