மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர் + "||" + Brain dead Donate the body organs of the young lady

மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்

மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம். அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது.
சென்னை,

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசிராம், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

வாணிஸ்ரீ சில மாதங்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாணிஸ்ரீயின் உறவினர்கள் அவரை வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாணிஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாணிஸ்ரீ நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவருடைய 8 உறுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு தானம் செய்யப்பட்டது. வாணிஸ்ரீயின் இதயம் அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இதனால் அந்த சிறுமிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மேலும் சில உறுப்புகள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், பயனாளிகளுக்கு பொருத்த அனுப்பி வைக்கப்பட்டது.