அவினாசி அருகே லாரி மோதி பெண் பலி கணவர் கண் எதிரே பரிதாபம்


அவினாசி அருகே லாரி மோதி பெண் பலி கணவர் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 21 April 2019 4:15 AM IST (Updated: 21 April 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

அவினாசி, 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள்(வயது 37). இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு ஓட்டுப்போட சென்றனர். அங்கு ஓட்டுப்போட்டு விட்டு அவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை பேபிராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் கமலம்மாள் உட்கார்ந்திருந்தார். அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கமலம்மாள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கமலம்மாளை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பேபிராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தன் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி இறந்ததை அறிந்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் தங்கவேலுவை தேடி வருகின்றனர்.

Next Story