பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை ஐகோர்ட்டு உறுதி செய்தது

பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 21 April 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

மும்பை,

பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

படுகொலை

தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் சாரதா. இவரது அண்ணன் கமல் சர்மா. கடந்த 2009-ம் ஆண்டு கமல் சர்மா வீட்டில் வைத்திருந்த பணம் காணாமல் போய் இருந்தது. தங்கை தான் பணத்தை திருடியிருப்பார் என அவர் சந்தேகப்பட்டார்.

சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடும் ஆத்திரமடைந்த கமல் சர்மா, தங்கை என்றும் பாராமல் சாரதாவை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

உறுதி செய்தது

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

இதையடுத்து இந்த தண்டனையை எதிர்த்து கமல்சர்மா மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

Next Story