வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பெண்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கனகமுட்லு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி லட்சுமி (வயது 23). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பத்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் தாலுகா வெங்கட சமுத்திரத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மனைவி பிரபா (25). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று பிரபா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story