படப்பை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் எதிரே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


படப்பை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் எதிரே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

படப்பை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் எதிரே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. 91 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கிய சிறு, குறு, பெரு விவசாயிகள் வந்து செல்லும் இந்த அலுவலகத்திற்கு வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் கருவிகள் பெறவும், பயிர்காப்பீடு திட்டங்களில் சேருவதற்கும் நெல், உளுந்து, வேர்க்கடலை விதைகளை மானிய விலையில் பெறுவதற்கும் வேளாண்மை துறையினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் விவசாயிகள் நாள்தோறும் வருகின்றனர்.

இந்த அலுவலகத்தின் எதிரே உள்ள மரங்களில் இருந்து கீழே விழும் இலைகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி கிடப்பதால் இந்த பகுதி முழுவதும் குப்பை கூளமாக உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியின் அருகருகே தோட்டக்கலை அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், இ-சேவை மையம், உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருகிறது. மேலும் இந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் சேர்த்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story