உளுந்தூர்பேட்டையில், வாலிபருக்கு கத்திக்குத்து - 2 பேருக்கு வலைவீச்சு


உளுந்தூர்பேட்டையில், வாலிபருக்கு கத்திக்குத்து - 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 21 April 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை ரேணுகா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிமலை. இவருடைய மகன் அருண்குமார்(வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென அருண்குமாரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அருண்குமாரை கத்தியால் குத்தியவர்கள் யார்? எதற்காக குத்தினார்கள் என்பது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story