கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இதுவரை ரூ.79.23 கோடி பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இதுவரை ரூ.79.23 கோடி பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 11:30 PM GMT (Updated: 2019-04-22T02:21:06+05:30)

கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இதுவரை ரூ.79.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இதுவரை ரூ.79.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.79.23 கோடி பறிமுதல்

கர்நாடகத்தில் தார்வார் உள்பட 14 தொகுதிகளில் 23-ந்தேதி (நாளை) 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பகிரங்க பிரசாரம் இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. அந்த தொகுதிகளில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 14 தொகுதிகளில் இதுவரை ரூ.31.81 கோடி ரொக்கம், ரூ.37 கோடி மதுபானம், போதை பொருள் ரூ.11.20 லட்சம், வீட்டு உபயோக ெபாருட்கள் ரூ.9 கோடி, பிற பொருட்கள் ரூ.1.31 கோடி என மொத்தம் இதுவரை ரூ.79.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமீறல்

இதில் அதிகபட்சமாக சிவமொக்கா தொகுதியில் மட்டும் ரூ.10.41 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் ெதாடர்பாக மொத்தம் 2769 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story