புதுக்கடை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
புதுக்கடை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மங்காத்தான் விளையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36), தொழிலாளி. இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருக்கிறார்.
நேற்று காலை செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் முன்சிறை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.
சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, செந்தில்குமாரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு செந்தில்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story