வாக்காளர் பட்டியலில் இருந்து பெங்களூரு நகரில் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு


வாக்காளர் பட்டியலில் இருந்து பெங்களூரு நகரில் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் இருந்து பெங்களூரு நகரில் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

வாக்காளர் பட்டியலில் இருந்து பெங்களூரு நகரில் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக பெங்களூரு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. கர்நாடகத்தில் சுமார் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் முதல்கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளிலும் 2 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 893 வாக்கார்கள் உள்ளனர். ெபங்களூருவில் நாடாளுமன்ற 3 தொகுதிகளிலும் சேர்த்து (அதாவது மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு பெங்களூரு வடக்கு) 72 லட்சத்து 64 ஆயிரத்து 976 வாக்கார்கள் உள்ளனர்.

1.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

இந்த நிலையில் பெங்களூருவில் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பெங்களூருவை சேர்ந்த பிரகலாத் என்பவர் கர்நாடக தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், முதல்கட்ட தேர்தல் நடந்த பெங்களூரு நகரில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து சுமார் 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்கள் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

அறிக்கை அளிக்க உத்தரவு

இந்த நிலையில் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார், ‘பெங்களூரு நகரில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் புகார்களை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான மஞ்சுநாத் பிரசாத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story