மும்ராவில் குடோன்களில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

மும்ராவில் குடோன்களில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 April 2019 11:30 PM GMT (Updated: 2019-04-22T03:42:37+05:30)

மும்ராவில் குடோன் களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

தானே,

மும்ராவில் குடோன் களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

மும்ரா, சில்பாட்டா டைமன்ட் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பிளாஸ்டிக் குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் தீ அருகில் உள்ள குடோன்களுக்கும் பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பொருட்கள் நாசம்

இந்த பயங்கர தீ விபத்தில் பிளாஸ்டிக் குடோன் உள்பட 7 குடோன்களில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

எனினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story