எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி


எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி
x
தினத்தந்தி 22 April 2019 10:37 AM GMT (Updated: 2019-04-22T16:07:38+05:30)

மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல். எனப்படுகிறது.

மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 195 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி பயிற்சி பணிக்கு 87 இடங்களும், டெக்னீசியன் பயிற்சிப்பணிக்கு 108 இடங்களும் உள்ளன.

குறிப்பிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 17-5-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


Next Story