மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் பெற நீண்ட நேரம் காத்திருந்த மாணவிகள் மறியலில் ஈடுபட பெற்றோர் முயன்றதால் பரபரப்பு
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவிகள் நீண்டநேரம் காத்திருந்தனர். இதனால் பெற்றோர் ஆத்திரம் அடைந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
தஞ்சாவூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியானது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தொடர் விடுமுறை இருந்ததால் தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, கல்லூரி முன்பு வைக்கப்பட்ட தகவல் பலகையிலும் எழுதப்பட்டிருந்தது.
இந்த கல்லூரியில் தான் தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் விண்ணப்பம் வாங்குவதற்காக நேற்றுகாலை 8 மணி முதலே தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பு காத்திருந்தனர்.
ஆனால் நுழைவு வாயிலின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இந்த வழியாக யாரையும் அனுமதிக்க முடியாது என துணை ராணுவத்தினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் மாணவிகள் தவித்து கொண்டு இருந்தனர். இது பற்றி கலெக்டர் அண்ணாதுரையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே அவர் கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள கதவை திறந்துவிட்டு பெண்களுக்கான விடுதியில் வைத்து விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி நிர்வாகத்தினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கல்லூரி முன்பு கூடி நின்ற மாணவிகளிடம் பின்புறம் விடுதி வளாகத்திற்கு வரும்படி கூறப்பட்டது. அதன்படி அவர்களும் தங்களது பெற்றோர்களை அழைத்து கொண்டு அங்கு சென்றனர். ஆனால் முன்புற கதவு திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது.
இதனால் சாலையில் மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு முன்புற கதவு திறந்துவிடப்பட்டதும், மாணவிகளும், பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்குவதற்காக வேகமாக சென்றனர். ஆனால் அங்கு விண்ணப்பம் வழங்க அலுவலர்கள் யாரும் இல்லை. விடுதிகளின் கதவுகளும் பூட்டி கிடந்தது. இதன்காரணமாக விடுதி வளாகத்தில் வரிசையில் காத்திருந்தனர்.
நீண்டநேரமாகியும் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் சிலர், எவ்வளவு நேரம் தான் காத்திருக்க முடியும். இதற்கு தீர்வு கிடைக்க சாலை மறியல் கூட செய்ய தயாராக இருக்கிறோம் என கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் கோபத்துடன் நிற்கும் தகவல் கல்லூரி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 11.30 மணிக்கு மேசை, நாற்காலி, விண்ணப்பங்களுடன் அலுவலர்கள் மகளிர் விடுதிக்கு வந்தனர். அந்த விடுதியின் கதவு திறக்கப்பட்டு விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. நீண்டநேர காத்திருப்பிற்கு பின்பு மாணவிகளும், பெற்றோர்களும் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் திருவள்ளுவர் கூறும்போது, எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கு ரூ.2 பதிவு கட்டணமாக வசூலிக்க வேண்டும். ஆனால் அந்த கட்டணத்தை கூட நாங்கள் வசூல் செய்யாமல் இலவசமாக விண்ணப்பம் வினியோகம் செய்கிறோம். பிற பிரிவு மாணவிகள் விண்ணப்பக்கட்டணம், பதிவு கட்டணம் என ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், வேதியியல், இயற்பியல் என 14 பிரிவுகள் உள்ளன. எல்லா பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் தான் வினியோகிக்கப்படுகிறது. அதில் எந்த பிரிவில் சேர விரும்புகிறேமோ அதை எழுதி, மற்ற சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மாணவிகள் காத்திருக்க கூடாது என்பதற்காக காலை 10 மணி முதல் விண்ணப்பம் வழங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Tags :
Next Story