பெண்ணை தாக்கிய மாமியார்- மருமகள் கைது


பெண்ணை தாக்கிய மாமியார்- மருமகள் கைது
x
தினத்தந்தி 23 April 2019 3:45 AM IST (Updated: 23 April 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தாக்கிய மாமியார்- மருமகள் கைது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜகுமாரி(வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி(38) என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜகுமாரி தனியாக வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கொளஞ்சி, அவரது மனைவி கவிதா(30), கொளஞ்சியின் தாய் மணிமேகலை(55) ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜகுமாரியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜகுமாரி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கவிதா, மணிமேகலை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கொளஞ்சியை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story