தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை மூலம் 81.92 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை மூலம் 81.92 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 9:30 PM GMT (Updated: 22 April 2019 8:26 PM GMT)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 81.92 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டை மூலம் ஓட்டுக்களை பதிவு செய்து உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. இதில் மொத்தம் 69.15 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 77.28 சதவீதம் பேரும், தூத்துக்குடியில் 65.90 சதவீதம் பேரும், திருச்செந்தூரில் 68.78 சதவீதம் பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 72.03 சதவீதம் பேரும், ஓட்டப்பிடாரத்தில் 69.06 சதவீதம் பேரும், கோவில்பட்டியில் 64.06 சதவீதம் பேரும் ஓட்டுப் போட்டு உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் ஓட்டுப்போட்டு உள்ளனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 81.92 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டுக்களை பதிவு செய்து உள்ளனர். 18.08 சதவீதம் பேர் இதர ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர். அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 21.17 சதவீதம் பேரும், கோவில்பட்டியில் 21.04 சதவீதம் பேரும் வேறு ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் தூத்துக்குடி தொகுதியில் 10 பேரின் ஓட்டுக்களை வேறு யாரோ பதிவு செய்து உள்ளனர். இதனால் 10 பேர் வாக்களிக்க சென்ற போது, அவர்கள் ஏற்கனவே அவர்கள் பெயரில் ஓட்டுக்களை பதிவு செய்து இருப்பதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் தனியாக வாக்குச்சீட்டில் தங்கள் சவால் ஓட்டுக்களாக பதிவு செய்தனர்.

Next Story