தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தொடக்க கல்வி பட்டயதேர்வு எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் ஜூன் 2018-ல் நடைபெற்ற தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இன்று முதல் விண்ணப்பம்
நடைபெற உள்ள ஜூன் 2019 தொடக்க கல்வி பட்டய தேர்வு தனித்தேர்வர்களிடம் இருந்து நேரடியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை குமுளூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பம் செய்ய விரும்பும் திருச்சி வருவாய் மாவட்டத்தில் வசிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பக்கம் 1 முதல் 3 வரை உள்ள அறிவுரைகளை பின்பற்றி பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து தேர்வு கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் புகைப்படம் ஆன்லைன் வெப் கேமரா மூலம் எடுக்கப்படுவதால் தேர்வர்கள் நேரில் வரும் பட்சத்தில் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story