விருத்தாசலத்தில், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


விருத்தாசலத்தில், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 23 April 2019 3:30 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வல்லியம் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 30) என்பவருக்கும் விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருப்பதாக விருத்தாசலம் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டு லைன் ஆலோசகர் பார்த்தீபராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, புருஷோத்தமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விரைந்து சென்று மணப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 18 வயது ஆகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து 18 வயது குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்தனர். இதன்பிறகு 18 வயது முடிவடைந்தபின் திருமணம் செய்துவைப்பதாக அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர். பின்னர் சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story