மாவட்ட செய்திகள்

மேல்மலையனூர் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை + "||" + Near melmalaiyanur Female, Suicide - What is the cause? Police investigation

மேல்மலையனூர் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

மேல்மலையனூர் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மேல்மலையனூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக் கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே உள்ள நெகனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கன்னியப்பன். இவரது மனைவி செல்வராணி(வயது 45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். வலியால் அலறித்துடித்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீக்காயமடைந்த செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராணி உடல்நலக்குறைவு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. தியாகதுருகத்தில், பெண், தீக்குளித்து தற்கொலை - கணவர் திட்டியதால் விபரீதம்
தியாகதுருகத்தில் கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. உளுந்தூர்பேட்டை அருகே, பெண், தீக்குளித்து தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. உளுந்தூர்பேட்டை அருகே, தீக்குளித்து பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. கணவர் சிறைக்கு சென்றதால் மன வேதனை - தீக்குளித்து பெண் தற்கொலை
கணவர் சிறைக்கு சென்றதால் மன வேதனைக்கு ஆளான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.