பிவண்டியில் பயங்கர தீ 5 குடோன்கள் எரிந்து நாசம்
பிவண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 குடோன்கள் எரிந்து நாசமானது.
தானே,
தானே மாவட்டம் பிவண்டி தாலுகா கேல்கர் அருகே ஜெய்மாத்தாஜி காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பல நிறுவனங்களின் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குடோன்களில் பிரஷ், தின்னர், டவல் மற்றும் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இங்குள்ள ஒரு குடோனில் நேற்று அதிகாலை 5.40 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் உள்ள குடோன்களுக்கும் பரவி கரும்புகையை கக்கியபடி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் குடோனில் பற்றிய தீயை நாலாபுறமும் சுற்றிநின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அங்கிருந்த 5 குடோன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் அதில் இருந்த பொருட்களும் தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து பிவண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த தீ விபத்தினால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story