திருவள்ளூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் காயம்
திருவள்ளூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அரிச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கவிதா (வயது26). நேற்று முன்தினம் கவிதா வேலையின் காரணமாக திருவாலங்காட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் பட்டரைபெரும்புதூரை சேர்ந்த குட்டியம்மாள் (35), மஞ்சாங்குப்பத்தை சேர்ந்த ரேணுகா (35) ஆகியோர் இருந்தனர். ஆட்டோ திருவள்ளூரை அடுத்த வரதராஜபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த கவிதா, குட்டியம்மாள், ரேணுகா ஆகியோர் காயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story