கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வியாபாரி பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள மெதிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53). இவருக்கு விமலா (49) என்ற மனைவியும், பவித்ரா(20) என்ற மகளும் உள்ளனர். ஏழுமலை மோட்டார் சைக்கிளில் வைத்து பழ வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு சென்று வியாபாரத்திற்காக பழங்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் எளாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சாவு
எளாவூர் ஏழுகண் பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் ஏழுமலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story